Viral

பெங்களூரு: முந்தி செல்வதில் போட்டி.. காதில் இருந்து இரத்தம் வழிய பைக் ஓட்டுநரை தாக்கிய பேருந்து ஓட்டுநர்!

முந்தி செல்ல முயன்ற சம்பவத்தில் ஆத்திரமடைந்த பெங்களூரு அரசு பேருந்து ஓட்டுநர், பைக் ஓட்டுநரை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு யெலஹங்கா என்ற பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.22), பகல் நேரத்தில் சாலையில் இரண்டு மாநகராட்சி பேருந்து முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது பின்னால் வருபவர்களுக்கு வழி விடாமல் இரண்டு பேருந்துகளும் முந்தி சென்றுகொண்டிருந்தது.

இதனால் எரிச்சலடைந்த பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், பேருந்து ஓட்டுநரிடம் வழிவிடுமாறு கைகளால் சைகை காட்டியுள்ளார். அப்போது அவர் தனது 'நடு விரலை' காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பேருந்து ஓட்டுநர், விரைவாக சென்று அந்த பைக்கை மறுத்துள்ளார்.

பின்னர் பேருந்தில் இருந்துகொண்டே அவரிடம் சண்டையிட்டுள்ளார். அதோடு அந்த நபரின் பைக் சாவியையும் பிடிங்கி வைத்துள்ளார். இதனால் அவர் பேருந்துக்குள் வந்து வாக்குவாதம் செய்ய இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் கடும் ஆத்திரம் கொண்ட பேருந்து ஓட்டுநர், மற்றும் நடத்துநர் பைக்கில் வந்த இளைஞரை சரமாரியாக அடித்தார். மேலும் அவரை கீழே மற்றும் பொருந்து கம்பியில் தள்ளிவிட்டார்.

இந்த தாக்குதலில் இளைஞரின் காதில் இருந்து இரத்தம் வழிய, கடும் காயமடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பயணிகள் சில வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த ஓட்டுநர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில், ஒரு அரசுப்பேருந்து ஓட்டுநர் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டுள்ள சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: டெல்லி 35 துண்டுகளாக வெட்டியெறியப்பட்ட காதலி கொலை வழக்கு.. பெயர் மாற்றி ஆதரவாக பேசிய உ.பி. இளைஞர் கைது !