Viral

“50 - 100 ஆண்டுகளில் பட்டாம்பூச்சி இனமே இருக்காது.. 65% பூச்சி இனங்கள் அழிந்து போகும்” : பகீர் தகவல்!

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.

அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வால் இன்னும் 9 ஆண்டுகளில் 60% கடற்கரைகள் காணாமல் போகும் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது பனிக்கரடி உள்ளிட்ட முக்கிய உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில், பூச்சி இனங்களும் அழிந்துவிடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, காலநிலை மாற்றத்தால் அடுத்த நூற்றாண்டுக்குள் 65% பூச்சியினங்கள் அழித்து போக கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை காலநிலை மாற்றம் (Nature Climate Change) இதழில் வெளியிட்டப்ப ஆந்த ஆய்வுக் கட்டுரையில், காலநிலை மாறத்தால் உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும். இதனை Climate-Mediate என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலநிலை Mediate உருவாகுவதால் புவியில் வாழும் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும்.

அதுமட்டுமல்லாது, 38 வகையான பூச்சியினங்களில் 65% பூச்சியினங்கள் அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும். குறிப்பாக, பட்டாம்பூச்சி, தட்டான் முதலிய பூச்சிகள் குளிர் ரத்தப் பிராணிகள் வகைகள் அதிகம் பாதிப்பை சந்திக்கும்.

இந்த 38 வகையான பூச்சியினங்களில் 25 வகை பூச்சியினங்கள் அவை வாழும் பகுதியில் ஏற்படும் தீவிர வெப்பநிலை மற்றும் ஒழுங்கற்ற காலநிலை மாறுபாடு காரணமாக அடுத்த நூற்றாண்டில் அழிந்து போக நேரிடும்” எனத் தெரிவித்துள்ளனர்.