Viral

கர்ப்பிணியாக இருந்த போது விபத்து.. 7 மாதம் கோமாவில் உள்ள பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை!

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷஃபியா. இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனத்தின் மீது லாரி மோதியது.

இந்த விபத்தில் ஷஃபியாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திலேயே சுயநினைவு இழந்துள்ளார். அப்போது அவர் ஒரு மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து அவரை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின்னர் மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் கோமா நிலைக்குச் சென்றது தெரியவந்தது. மேலும் அவர் வயிற்றில் உள்ள சிசு ஆரோக்கியத்துடன் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் கணவர் ஒப்புதலுடன் மருத்துவமனையிலேயே சிசுவின் வளர்ச்சி கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 மாதமாக மோமாவில் உள்ள ஷஃபியாவுக்கு கடந்த 22ம் தேதி அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைப்பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் பிறந்த குழந்தையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை பிறப்பு என்பது தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு தருணம். அது ஒரு ஆனந்தமான மகிழ்ச்சி. ஆனால் ஷஃபியாவிற்கு குழந்தை பிறந்தது கூட தெரியாமல் படுத்த படுக்கையாக கோமால் இருப்பது அங்கிருந்த மருத்துவர்கள் உட்பட பலரையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது.

Also Read: உலகை பயமுறுத்திய Zombie ஏஞ்சலினா ஜோலியின் உண்மை முகம் இதுவா?-ஈரான் பெண்ணின் அழகை கண்டு வியந்த நெட்டிசன்ஸ்