Viral
india vs pakistan : கிண்டலடித்த பாகிஸ்தான் ரசிகருக்கு google ceo சுந்தர் பிச்சை பதிலடி.. வைரல் ட்வீட்!
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இறுதி பந்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்திய அணி இந்த ஆட்டத்தை ஆடிய விதம் தொடர்பாகவும் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். இந்த நிலையில், உலக புகழ்பெற்ற கூகிள் நிறுவனத்தின் லைமை செயலர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் வெற்றி குறித்து பதிவிட்டுள்ளார்.
தனது பதிவில், " அனைவர்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! பண்டிகையை கொண்டாடும் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறந்த நேரத்தைக் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். இன்று மீண்டும் கடைசி மூன்று ஓவர்களை பார்த்து கொண்டாடினேன், என்ன ஒரு ஆட்டம் மற்றும் செயல்திறன்" என இந்தியா பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்து கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த இணையவாசி ஒருவர் "நீங்கள் முதல் மூன்று ஓவர்களையும் பார்க்க வேண்டும்" என பாகிஸ்தான் பந்துவீச்சில் இந்திய தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்ததை குறிப்பிட்டு கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சையின் ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது. தனது பதிலில் " "நான் அதையும் பார்த்தேன். புவனேஷ்வர் குமாரும், அர்ஷதீப் சிங்கும் சிறப்பாக பந்து வீசினார்கள்" என இந்திய அணியின் பந்துவீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்ததை குறிப்பிட்டு பதிலடி கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!