Viral
வீட்டிற்குச் செல்லும்போது சாலையோர கடையில் மாம்பழம் திருடிய கேரள போலிஸ்: காட்டிக் கொடுத்த CCTV!
கேரள மாநிலம், இடுக்கி ஏ.ஆர்.கேம்ப் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஷஹீப். இவர் அண்மையில் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது சாலையோரம் இருந்த பழக்கடை அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் யாரும் அங்கு இல்லாததைக் கண்ட அவர் ஒரு கூடை மாம்பழத்தைத் தனது வாகனத்தில் வைத்துத் திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இப்படியான போலிஸாரால் காவல்துறைக்கே களங்கம் ஏற்படுகிறது' என இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஷஹீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர கடையில் இருந்து போலிஸார் மாம்பயம் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!