Viral
டாக்டர் என்றால் இவர் மாதிரி இருக்கனும்.. இணையத்தில் வைரலாகும் மருத்துவரின் கையெழுத்து !
உலகில் புரிந்துகொள்ள முடியாத விஷயங்கள் பல இருக்கிறது. எகிப்து பிரமீடு முதல் நம்ம ஊர் தஞ்சை பெருவுடையார் கோவில் வரை அதை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் எல்லாருக்கும் பொதுவாக இருப்பது என்றால் அது மருத்துவர்களின் கையெழுத்துதான்.
அதில் என்ன இருக்கிறது, என்ன எழுதுகிறார்கள் என அந்த துறையில் இருப்பவர்களை தவிர யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த கையெழுத்தால் நாமும் பலமுறை எரிச்சல் ஆகியும் இருப்போம்.
இந்த நிலையில், அந்த நிலையை தாண்டி அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் மருந்து சீட்டை எழுதுகொடுத்துள்ளார் ஒரு மருத்துவர் ஒருவர். அவரின் அந்த மருந்து சீட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மருத்துவர் நிதின் நாராயணன். இவர் பாலக்காட்டில் உள்ள நெம்மாராவில் உள்ள CHC ல் பணிபுரிந்துவருகிறார். இவர் தன்னுடன் வரும் நோயாளிகளுக்கு அனைவர்க்கும் புரியும் வகையில் மருத்துவ சீட்டு எழுதி வருகிறார்.
இது தொடர்பாக பேசிய மருத்துவர் நிதின் நாராயணன் "சிறு வயதில் இருந்தே அழகாக எழுதுவது எனக்கு பிடிக்கும் என்றும் எதற்காகவும் அதை மாற்றக்கூடாது என்ற மனநிலை எப்போதும் இருக்கும். நான் மருத்துவரான பிறகும் மற்ற மருத்துவர்களைப் போன்று இல்லாமல் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக எனக்குப் பிடித்த என்னுடைய கையெழுத்தை மாற்றவே இல்லை, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மருந்துச்சீட்டுகளை அனைவருக்கும் புரியும் படி அழகாகத் தான் எழுதுவேன் என்றும் இதை யாருக்காகவும் எப்போதும் மாற்றிக் கொள்ள மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!