Viral

"DONT CALL ME அண்ணா, UNCLE.." - இணையத்தில் வைரலாகும் Uber ஓட்டுநரின் வேண்டுகோளின் பின்னணி என்ன ?

தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவையை முன்பதிவு செய்து பயணிகின்றனர். அதற்கென்று தனி ஆப்பும் உள்ளது. அந்த வகையில் மக்கள் மத்தியில் ஓலா, ஊபர் ஆப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதன்மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள், வாகனத்தில் பயணிக்கும்போது பல சம்பவங்கள் நிகழும். அதில் சில சம்பவங்கள் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோஹினி என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊபர் வாகன ஓட்டுநர் ஒருவரது காரின் சீட்டில் எழுதியிருந்த வாசகத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில், ""DONT CALL ME Bhaya and UNCLE.." என்று எழுதியிருந்தது. அதாவது, "யாரும் என்னை அண்ணா என்றோ அங்கிள் என்றோ அழைக்க வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுவாக ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களை பயணிகள் 'அண்ணா' என்று சொல்லி அழைப்பதே வழக்கமாக உள்ளது. ஆனால் இவர் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று எழுதியிருந்தது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: வகுப்பறையில் பூட்டி கடுமையாக தாக்கப்பட்ட பள்ளி சிறுவர்கள்.. DANCE ஆடவில்லை என்பதால் ஆசிரியர் வெறிச்செயல்!