Viral
'sir, வீட்டுல சின்ன பின் charger இல்லையா?'- ராஜபக்சேவை கிண்டல் செய்து இணையத்தை கலக்கும் புகைப்படம்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தினமும் 15 மணி நேரத்துக்கும் மேல் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இப்படி இலங்கை மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலைக்குக் காரணமாக உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாததால் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், இடையில் பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே வந்த பின்னரும் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் அதிபர் மாளிகை நோக்கி குவிந்தனர்.
இந்த போராட்டத்தை முன்னிட்டு ஊரடங்கு நிலை அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், மக்கள் அதிபர் மாளிகையை நோக்கி அணிவகுத்தனர். சிறிது நேரத்தில் அதிபர் மாளிகையின் பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்டு மாளிகையின் முன்பகுதி பொதுமக்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
இதைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ பாதுகாப்பில் தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் மாளிகையில் இருந்து சொகுசு கார்கள் விமான நிலையம் நோக்கி சென்ற வீடியோ இணையத்தில் வெளியானது. இதனால் அதிபர் நாட்டில் இருந்து தப்பி செல்கிறாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இலங்கையில் இருந்து கிளம்பிய ராணுவ கப்பலில் சிலர் கடைசி நேரத்தில் ஏறியதாகவும், அது கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினராக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போதைய நிலையில் அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அதிபர் மளிகை முழுக்க போராட்டகாரர்கள் கைகளில் இருப்பதால் அங்கு படுக்கை அறை, உணவு அறை, பூங்கா, நீச்சல் குளம் என அனைத்து இடத்திலும் போராட்ட காரர்கள் வளம் வருகின்றனர். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் 'sir, வீட்டுல சின்ன பின் charger ஒன்னு இல்லையா?’ என்று கேட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?