Viral

இனி YouTube, Facebookல் சம்பாதிப்பவர்களும் வரி செலுத்த வேண்டும்: புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஒன்றிய அரசு!

இந்தியாவில் ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் அவர்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன் படி, இந்திய வருமானவரிச் சட்டம், 1961-ன்படி, TDS என்று சொல்லப்படும் Tax Deduction at Source, ஒரு நபரின் வருவாய் ஆதாரத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் செய்வதாகும்.

அதாவது சொந்த தொழிலோ, நிறுவனங்களில் பணிபுரிபவரோ எதுவானாலும் சரி, அவர்களின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்கள் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கு, 10% TDS பிடித்தம் செய்யப்படும் என்ற புதிய விதி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

சில நிறுவனங்களில் ஒவ்வொருவரின் சம்பளத்திற்கு ஏற்ப, அந்த நபர் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனமே ஒரு கணக்கிட்டு, வரி தொகையை மாதந்தோறும், அவர்கள் சம்பளத்திலிருந்து பிடிதம் செய்யப்படுகிறது. மேலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கான சான்றிதழை அந்த ஆண்டு இறுதியில் வழங்குப்பட்டு வருகிறது.

இப்படி சம்பாதிக்கும் பணத்தில் நம்மில் பலர் TDS மூலம் முறையாக வரி செலுத்தி வருகிறோம். தற்போது சமூக வலைதளங்கள் மூலம் சம்பாதிப்பவர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்பது தெரியாது என்பதால், அவர்களுக்கும் TDS பிடித்தம் செய்யப்படும் என்ற புதிய விதி வந்துள்ளது.

அந்த வகையில் Social Media Influencer என்று சொல்லப்படும் நபர்கள், தாங்கள் ஈட்டும் வருமானத்திற்கு இனி 10% TDS பிடித்தம் செய்யப்படும். அதன்படி சமூக வலைதள பக்கத்தில் அதிக Followers கொண்டிருக்கும் பிரபலம், தங்கள் பக்கத்தில் ஒரு நிறுவனத்தின் பொருளை விளம்பரம் செய்யும்போது, அதற்கு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையோ அல்லது அதே பொருளை இலவசமாகவோ அந்த நிறுவனம் வழங்கும்.

அவ்வாறு கொடுக்கப்படும் அந்த பொருளுக்கு வரி செலுத்தமாட்டார்கள். ஆனால் தற்போது அவ்வாறு வழங்கப்படும் பொருளோ, தொகையோ ரூ.20,000க்கு மேலாக இருந்தால் முறையாக 10% TDS வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Also Read: மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் : மாப்பிள்ளையை விருந்து அழைத்து எரித்துக் கொன்ற மாமனார்!