Viral
“விளையாட வயது ஒரு தடையில்லை..” : 64 வயதில் அசத்தும் லாரி டிரைவர் - இணையத்தை கவர்ந்த வைரல் வீடியோ!
கேரள மாநிலத்தை சேர்ந்த 64 வயதுடைய முதியவர் ஜேம்ஸ். லாரி டிரைவரான இவர், ஒரு திறமை மிக்க கால்பந்து வீரர் போல், விளையாடியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல யூடியூபரான பிரதீப் என்பவர் ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் 64 வயதுதக்க முதியவர் ஒருவர், தேர்ந்த கால்பந்தாட்ட வீரர் போல் விளையாடியுள்ளார்.
அதாவது முதலில் பிரதீப் பந்தாட்டத்தை ஆட, பின்னர் அதை முதியவரிடம் பாஸ் பண்ண, அவரோ, அதனை தனது கால், தலை, தோள்பட்டை ஆகியவற்றை உபயோகித்து விளையாடினார். இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்த பிரதீப் அவரை பாராட்டி பதிவு ஒன்றையும் செய்திருந்தார்.
அந்த பதிவில், "அற்புதமாக கால்பந்து விளையாடும் இந்த 64 வயதானவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் வாழ்க்கையை ஓட்ட ஒரு டிரக் ஓட்டுகிறார், மேலும் தனது கால்பந்து கிட்டையும் தனது லாரியில் எடுத்துச் செல்கிறார். அவர் வயநாடு கால்பந்து அணியின் ஒரு அங்கமாக இருந்தார்.
அந்த அணியில் இன்னும் இந்த விளையாட்டை விளையாடுபவர் இவர் மட்டுமே. அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? கண்டிப்பாக அதை செய்யுங்கள் என்பதுதான்” என்று பதிவிட்டிருந்தார்.
ஜேம்ஸ் ஒரு கால்பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பதிவிட்ட இந்த வீடியோ, தற்போது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!