Viral
ஐபோன் 13 சீரிஸ்.. ஆப்பிள் வாட்ச் - புதிய சாதனங்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம் : இந்தியாவில் என்ன விலை?
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் உள்ளிட்ட பல்வேறு புதிய சாதனங்களை நேற்று அறிமுகம் செய்தது. மேலும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக இந்த நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 13 சீரிஸ்:
அந்தவகையில் ஐபோன் 13 சீரிஸ் மாடலில் மொத்தம் 4 போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஐபோன் 13 சீரிஸ் 5 நிறங்களில் வெளியாகியுள்ளது. மேலும் ஐபோன் 13 மினி மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் ஐபோன் 13 மினி சேமிப்பு திறன் அடிப்படையில் 69,900 ரூபாய், 79,900 ரூபாய், 99,900 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 விலை சேமிப்பு திறன் அடிப்படையில் 79,700 ரூபாய், 89,900 ரூபாய், 99,900 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்:
இதனைத் தொடர்ந்து, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய ரக மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்விலை சேமிப்புத்திறன் அடிப்படையில் 1,19,000 ரூபாய், 1,29,900 ரூபாய், 149,900 ரூபாய் மற்றும் 1,69,900 ரூபாய்க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை சேமிப்பு திறன் அடிப்படையில் 1,29,900 ரூபாய், 1,39,900 ரூபாய், 1,59,900 ரூபாய் மற்றும் 1,79,900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் :
அதேபோல், புதிய ஐபேட், ஐபேட் மினி மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 உள்பட பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, புதிய ஐபோன் 13 மாடல்களின் அறிமுகத்துடன், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 12 தொடரின் விலைகளை குறைத்துள்ளது. அதுமட்டுல்லாது ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உடன் ஐபோன் XR மாடல்களை சந்தையில் இருந்து நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தகது.
Also Read
-
”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றி வருகிறோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
-
தமிழ்நாட்டு வீரர் அ.மஹாராஜனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!