Viral
“சென்னையில் அரசுப் பேருந்து கடத்தல்” - அண்ணாநகர் பணிமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அண்ணாநகர் பணிமனையில் வழக்கம்போல், அதிகாலையில் பேருந்தை எடுப்பதற்காக போக்குவரத்து ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது, பணிமனையிலிருந்து அதிகாலை 3.20 மணிக்கு 27பி என்ற வழித்தட எண் கொண்ட அரசுப் பேருந்தை சோதனை செய்த பின், பணிமனையின் முன்பாக ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.
பின்னர், கையெழுத்திட்டு வருவதற்காக பணிமனைக்கு உள்ளே சென்று விட்டு, 4 மணிக்கு திரும்பிய போது, நிறுத்திய இடத்தில் பேருந்து இல்லாமல் போனதைப் பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
அரசுப் பேருந்து காணாமல் போனது தொடர்பாக, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், திருமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியைக் கொண்டு, பேருந்து இருக்குமிடத்தை காவல் துறையினர் கண்டறிய முயற்சித்தனர்.
அப்போது, பேருந்தானது பாடி மேம்பாலத்தின் கீழ் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேம்பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்த பேருந்தை காவல்துறையினர் மீட்டனர். பணிமனையில் இருந்த பேருந்தை வெகு லாவகமாக கடத்திச் சென்றவர்களை கண்டுபிடிப்பதற்காக, பணிமனையைச் சுற்றியுள்ள சி.சி.டி.வி கேமராக்களை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!