Viral
'ஊரடங்கில் சிக்கிய தனது மகனை 1400 கி.மீ தூரம் ஸ்கூட்டரில் பயணித்து மீட்ட வீரத்தாய்' : ருசிகர சம்பவம்!
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதன் நகரைச் சேர்ந்தவர் ரசியா பேகம் (48). அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ள இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் ஒரு பொறியியற் பட்டதாரி. இளையமகன் நிஜாமுதீன் (19). எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்காக பயிற்சி வகுப்பில் படித்து வந்திருக்கிறார்.
இவர், கடந்த மார்ச் 12 அன்று நெல்லூர் மாவட்டம் ரஹமாதாபாத்திற்குச் சென்று நண்பரின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில், கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை.
தன்னுடைய வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நிஜாமூதின் தனது தாயிடம் அழுதிருக்கிறார். 'அழாதே மகனே.. நான் உன்னை வந்து மீட்டுச் செல்கிறேன்' என்று அவரது தாய் ரசியா பேகம் உறுதியளித்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து ரசியா பேகம், தனது மூத்த மகனை அனுப்பலாம் என்று முதலில் யோசித்திருக்கிறார். பின்னர், அவனை போலிஸார் தடுத்து நிறுத்துவார்கள் என்று அச்சப்பட்டு தானே செல்வற்கு முடிவெடுத்திருக்கிறார்.
இதையெடுத்து, ஒரு காரை எடுத்துச் செல்லலாம் முடிவு செய்த அவர், பின்னர் அதில் ஏற்படும் சங்கடங்களை அறிந்து தானே ஸ்கூட்டரில் செல்ல முடிவெடுத்தார். காவல்துறை துணை ஆணையர் ஜெயபால் ரெட்டியை சந்தித்து நிலையை விளக்கியுள்ளார். உடனே அவர் ரசியா பேகம் பயணம் செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கி உதவி செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை, அவர் பயணத்தைத் தொடங்கி மறுநாள் பிற்பகல் நெல்லூரை அடைந்தார். அவர் தனது மகனுடன் அதே நாளில் சொந்த ஊருக்குப் புறப்பட்டு கடந்த புதன்கிழமை மாலை சொந்த ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்தார்.
பாசத்தின் காரணமாக ஒரு பெண்மணி, ஊரடங்கு காலத்தில் தன்னந்தனியாக 1400 கிலோமீட்டர் தூரம் பயணித்து தன் மகனை மீட்டு வந்திருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வீரத்தாய் ரசியா பேகம் கூறுகையில், "ஒரு பெண்ணுக்கு ஒரு சிறிய இரு சக்கர வாகனத்தில் இது ஒரு கடினமான பயணம். ஆனால் என் மகனை மீண்டும் அழைத்து வருவதற்கான மனஉறுதி எனது எல்லா அச்சங்களையும் தகர்த்தெரிந்தது. முன்னெச்சரிகையாக ரெட்டி மற்றும் குடிநீரை என் வண்டி பெட்டியில் நிரப்பினேன். பெட்ரோல் நிலையங்களில் நிறுத்தி சாப்பிட்டேன். தண்ணீர் அருந்தினேன். போக்குவரத்து இயக்கம் மற்றும் சாலைகளில் மக்கள் இல்லாத இரவுகளில் பயணம் செய்வது பயமாக இருந்தது. இருப்பினும் என் மகன் மீதான பாசம் என்னை தொடர்ந்து பயணிக்கச் செய்தது" என்றார்.
பாசத்தின் காரணமாக அச்சத்தை வென்ற தைரியத் தாய் ரசியாபேகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!