Viral
காவி உடை, ருத்ராட்ச மாலை -திருவள்ளுவரை அவமதித்த பா.ஜ.கவுக்கு எதிராக ட்ரெண்டாகும் #BJPInsultsThiruvalluvar
தமிழகம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ம் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அமைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், மொழிவாரி மாநிலங்களை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் தற்போது தமிழ்நாட்டு மக்களை நெருங்கும் முயற்சியில் இறங்கி தமிழ்மொழிக்குப் பெருமை செய்தவர்களை இழிவுபடுத்தி வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க சார்பில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் இருக்கக்கூடிய படத்தில் திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிந்து, ருத்திராட்ச மாலை, பட்டை என மத அடையாளங்களைப் பூசி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு இணையத்தில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி #BJPInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பலரும் பா.ஜ.கவினருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!