Viral
‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் கலக்கும் நடிகை ரம்யா பாண்டியன் - வித்தியாசமான கெட்-அப்பில் வைரலாகும் புகைப்படங்கள்!
ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. இந்தப் படத்தினைத் தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார்.
மொட்டை மாடியில் இவர் நடத்திய போட்டோஷூட் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. ஆயிரக்கணக்கானோர் அன்று முதல் ரம்யா பாண்டியனின் தீவிர ரசிகர்கள் ஆகிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் ரம்யா பாண்டியன் ஆர்மி தொடங்கும் அளவிற்கு உலகெங்கிலும் அவரது புகழ் பரவியது. இதனைத்தொடர்ந்து ரம்யா பாண்டியன் தனது அட்டகாசமான புகைப்படங்களை இணைய வெளியில் உலவவிட்டு வருகிறார்.
தற்போது அவர், புள்ளிங்கோ கெட்-அப்பில், கிராப் வைத்துக்கொண்டு போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
புள்ளிங்கோ கெட்-அப்பிற்காக அவர் முடியை கிராப் ஸ்டைலில் வெட்டி விட்டார் என எல்லோரும் கூறிக் கொண்டிருக்க, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. புள்ளிங்கோ கெட்-அப்பில் புகைப்படம் எடுப்பதற்காக, விக் வைத்துக் கொண்டேன்’ என்று சொல்லி வழக்கமான புன்னகையை உதிர்த்துள்ளார் ரம்யா பாண்டியன்.
இப்போது ரம்யா பாண்டியன்தான் இணையவெளியில் டாப்பு! பிரபலமான பல்வேறு கதாநாயகிகளுக்கு மத்தியில் ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது.
Also Read
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!