Viral
அன்லிமிடெட் சாப்பாடு, 8 வகையான கறிக் குழம்புகள் - காரசார அசைவ உணவு விரும்பிகள் மிஸ் செய்யக் கூடாத உணவகம்!
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து, ஜி.என் செட்டி சாலைக்கு செல்லும் கோவிந்தா தெருவில் துவக்கப்பட்ட 'நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்' என்கிற புதிய உணவகத்தை திறந்து வைத்தார் நடிகர் வைகைப் புயல் வடிவேலு.
மிகவும் அரிதாகவே தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகர் வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். தான் இருக்கும் இடமெல்லாம், காமெடி சரவெடிகளை தெறிக்க விடும் வைகைப் புயல், இனி தன்னை பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணலாம், என் இதன் மூலம் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் உணவககங்கள் இருந்தாலும், தாங்களே ’ஒரிஜினல்’ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் என்று கூறுகின்றனர் நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்ஸின் உரிமையாளர்கள். காரசாரமான செட்டிநாட்டு பாணி உணவுகளை மட்டுமே பறிமாறும் இந்த உணவகம், காலை 12 முதல் 4 மணி வரை மட்டுமே செயல்படும். இதனால் மதிய நேர உணவு வகைகளில் தாங்கள் எக்ஸ்பெர்ட் என்பதை இந்த உணவகம் அடித்துக் கூறுகிறது.
அன் லிமிடெட் சாப்பாட்டுடன் தரப்படும் பல்வேறு வகையான குழம்புகள்தான் இதன் தனிச்சிறப்பே. கிட்டதட்ட 8 வகை கறிக்குழம்புகள் பறிமாறப்படுக்கின்றன. கோலா உருண்டை, மீன், சிக்கன் ஆம்லேட், பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி எனப் வெரைட்டி காட்டும் அசைவ உணவுகளே இவர்களின் சிறப்பு. ஒரு நல்ல மதிய வேளையில், நல்ல பசியுடன், காரசார நாட்டுப்புற உணவுகளை தேடித் தேடி சுவைக்க நினைப்போர், நிச்சயம் நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்ஸில் சுவைத்து பார்க்க வேண்டும்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!