Viral
ஜாகுவார் கேட்டா BMW வாங்கித் தர்றியா ? : தந்தையிடம் கோபப்பட்டு 70 லட்ச ரூபாய் காரை ஆற்றில் தள்ளிய மகன்
ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரில் உள்ள இளைஞர் ஒருவர் பெரும் பணகாரரான தனது தந்தையிடம் ஜாகுவார் கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால், அவர் தந்தையோ ஜாகுவார் காருக்கு பதில் BMW காரை பரிசாக அளித்திருக்கிறார். இதனை வாங்க மறுத்த அந்த இளைஞன், ஜாகுவார் கார் கிடைக்காத ஆத்திரத்தில் புதிதாக வாங்கப்பட்ட பி.எம்.டபிள்யூ காரை ஆற்றில் தள்ளியுள்ளார்.
ஆற்றில் தள்ளிவிட்ட கார் திடீரென சிக்கிக்கொண்டதால், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ஆற்றில் காரை தள்ளிவிட்டதை அந்த இளைஞர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 4 அறிக்கைகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு!
-
”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
-
“தமிழ்நாடு அங்கன்வாடி குறித்து பரப்பப்படும் தவறான தகவல்!” : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
-
ரூ.36.62 கோடி செலவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!