ரக்கூன் எனும் அணில் கரடி
Viral

சுத்தம் தான் முக்கியம் - கை கழுவிவிட்டு வந்து சாப்பிடும் விநோத விலங்கு!

சுத்தம் சோறுபோடும் என சத்தம் போட்டு கத்திப் பார்த்தாலும் எத்தனை பேர் கேட்கிறார்கள்?. காட்டில் வாழும் அணில்கரடி எனும் விலங்கொன்று சுத்தமும், சுகாதாரமாக வாழ்கிறது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

வட மற்றும் தென்னமெரிக்காவின் பல பகுதிகளிலும், மேற்கிந்திய தீவுகளில் சில இடங்களிலும் வாழ்ந்து வருகிறது ரக்கூன் (Raccoon ) என்கிற விநோத விலங்கு. ஏழு வகைகயான இந்த விலங்குகள் 60 செ.மீ., உயரம் வளரக்கூடியவை. இந்த ரக்கூன் தமிழில் அணில் கரடி என அழைக்கப்படுகிறது.

இந்த அணில் கரடிகளுக்கு பலாப்பழம் என்றால் உயிர். இதுதவிர மீன், நண்டு என்றாலும் இவற்றிற்கு ரொம்ப விருப்பமாம். குட்டையான முன்னங்கால்களையும், தடிமனான பின்னங்கால்களையும் பெற்ற இவை, முன்னங்கால்களை கைகள் போன்று பயன்படுத்துகின்றன. மரத்தில் பழங்களை பறிக்கும் இவை அருகில் இருக்கும் நீர்நிலைகளுக்குச் சென்று கையையும், பழத்தையும் கழவி விட்டு தான் சாப்பிடுமாம். இந்த சுத்தம் தான் இந்த அணில் கரடியின் சிறப்பு என்கின்றனர் விலங்கியலாளர்கள்.

பாலூட்டி வகையான இந்த அணில் கரடிகள், அழும்போது குழந்தை அழுவது போன்றே அழுகின்றன. தங்கள் குட்டிகளையும் மனிதர்கள் குழந்தையை பராமரிப்பது போன்றே பராமரிக்கின்றன. நீச்சல் வீரர்களான இந்த அணில் கரடிகள் பார்ப்பதற்கு நரிகள் போன்று இருந்தாலும் குழந்தை மனம் கொண்டவை. குட்டியாக இருக்கும் ஒரு அணில் கரடியை வளர்க்கத் தொடங்கினால் அது செல்லப்பிராணி ஆகிவிடுமாம்.

இந்த சுத்தக்கார அணில்கரடிகளுக்கு ஒரு ‘ஓ’ போடுவோம்!.