Viral

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்... போட்டியாளர்கள் கைதாக வாய்ப்பு!?

ஆள்கடத்தல் வழக்கில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை செய்வதற்காக சென்னை செம்பரம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டுக்குள் தெலங்கானா போலீசார் சென்றுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நடத்தும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் சில படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ஆகாஷுடன் ஏற்பட்ட மணமுறிவைத் தொடர்ந்து, தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை மணந்துகொண்டார் வனிதா. இருவரும் கருத்து வேறுபாட்டால் 2010-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். இவர்களது மகள் ஜோவிகா, தந்தையுடன் தெலுங்கானாவில் வசித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் மகள் ஜோவிகாவை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீஸில் புகார் கொடுத்தார் ராஜன் ஆனந்த். இஇந்நிலையில் தமிழக போலீசாரின் உதவியோடு, பூந்தமல்லியில் உள்ள பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து வனிதாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால், வனிதா கைது செய்யப்படுவாரா என பரபரப்பு நிலவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இன்னொரு போட்டியாளரான மீரா மிதுன் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தி.நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் அளித்த புகாரில், மீரா ஆஜராகும்படி தேனாம்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டுள்ளதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.