Viral
லண்டனில் ஒலித்த “தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க” : தமிழ் ரசிகர் அசத்தல்!
லண்டன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்றைய தினம் இந்தியா - இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்வையிட இந்திய ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். இந்திய கிரிக்கெட்அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நஜிமுதீன் ஜஹாபர் சாதிக் என்பவர் போட்டியை காண்பதற்குச் சென்றிருந்தார். அவர் மைதானத்தின் உள்ளே "தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க" என்ற வாசகங்களை எழுதிய பதாகை ஒன்றை ஏந்திய படி, "தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க" என்று முழக்கங்களை எழுப்பினார். அவருடன் போட்டியை காண்பதற்குச் சென்ற மற்ற தமிழக ரசிகர்களும் அந்த முழக்கத்தை பின்தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். அங்கிருந்த இந்திய ரசிகர்கள் இந்த செயலை உற்சாகத்துடன் ரசித்து கைதட்டி மகிழ்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த ரசிகர்கள் இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்திய தேசம் முழுவதும் பெரியார் பெயர் ஒலித்த நிலையில், இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!