Viral

'பாசிச பா.ஜ.க ஓழிக' இம்முறை கோஷமிட்டது தமிழசையின் மகன்!

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து பெரும்பான்மை இடங்களை வென்று பா.ஜ.க 2வது முறையாயாக ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க பல மாநிலங்களில் புதிதாக கால் பதித்ததாலும் தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.

ஆனாலும் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் ”தாமரை மறந்தே தீரும்” என தொடர்ந்து பேசிவருகிறார்கள். இவர்கள் இந்த கோசம் எழுப்பும் போதெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த எவராவது ஒருவர் அவர்களுக்கு எதிராக ”பாசிச பா.ஜ.க ஒழிக” என பதில் கோஷம் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, விமானத்தில் தூத்துக்குடி சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை. விமானத்தில், 'பாசிச பா.ஜ.க ஒழிக' என்று மாணவி சோபியா கோஷம் எழுப்பினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. பின்னர் ட்விட்டர் ட்ரெண்டிங் வரை சென்றது.

இதனையடுத்து தற்பொழுது பா.ஜ.கவினர் குடும்ப உறுப்பினர்களே பா.ஜ.கவிற்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். அப்படிதான் நேற்றையதினம் தமிழக பாஜக தலைவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தமிழிசையின் மகன் சுகநாதன் பத்திரிக்கையாளர் முன்னிலையில் பா.ஜ.கவிற்கு எதிராக பேசினார். பா.ஜ.க தமிழகத்தில் வெற்றிபெறாது என கத்தினார்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த பா.ஜ.க தொண்டர்கள் அவரை இழுத்துச் சென்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் குடும்ப பிரச்னை காரணமாக இப்படி நடந்துக் கொண்டதாக தெரிவித்து அங்கிருந்து கிளம்பினார்.

சோபியா தனது சொந்த ஊரான தூத்துக்குடியில் நடந்த அராஜகத்துக்காக கோஷம் எழுப்பினார். அவரிடம் தகராறு செய்து, போலீஸில் புகார் அளித்து கைது செய்யவும் வைத்தார் தமிழிசை. இப்போது அவரது மகனே விமான நிலையத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளார். இப்போது, என்ன செய்யப்போகிறார் தமிழிசை? என சமுகவைத்தளத்தில் பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.