Viral
மோடியின் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டது: - The Guardian தலையங்கம்
”மோடி மீண்டும் பிரதமர் ஆவது உலக நாடுகளுக்கு மோசமான செய்தி. பொய் பிரசாரம், வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார்.” என தலையங்கம் வெளியிட்டுள்ளது பிரிட்டன் பத்திரிகையான தி கார்டியன் .
உலகின் மிகப் பெரிய தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடி என்ற தனிமனிதர் வெற்றி பெற்றதாக கூறுகின்றது. 5 ஆண்டு ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் விழ்ச்சி அடைந்தாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறார் மோடி. இந்த வெற்றி இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே மோசமான செய்தி என அந்த பத்திரிகை எச்சரித்துள்ளது. இந்து தேசியவாதம் என்ற பெயரில் நாட்டை மோசமான பாதைக்கு அழைத்துச்செல்லும் இயக்கத்தின் அரசியல் பிரிவே பாரதீய ஜனதா கட்சி என்று விமர்சித்துள்ளது.
மேலும், இந்து உயர் சாதியினர் ஆதிக்கம், பெரு முதலாளிகளுக்கு ஆதரவு, வெறுப்பு அரசியல், மாநில அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்துதல் இவையே பாரதீய ஜனதாவின் நிலைபாடு என்று சுட்டுகாட்டியுள்ளது. மோடியின் பெருவாரியான வெற்றியின் மூலம் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டதாகவும் தி.கார்டியன் குறிபிட்டுள்ளது. மோடி சிறந்த பிரச்சாரகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொய் தகவல்கள், பிரிவினைவாதத்தை வைத்து மோடி பிரச்சாரம் செய்வதாக மேற்க்கோள் காட்டியுள்ளது.
இந்த பத்திரிக்கைப் போலவே அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் மோடியின் வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளது. தி.கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இரண்டுமே உலக அளவில் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற மிகப் பெரிய பத்திரிகைகள். இவை இரண்டுமே பல நாடுகளில் அதிக விற்ப்பனையாகும் பத்திரிகைகள் ஆகும். இந்த இரண்டு பத்திரிக்கைகளும் மோடியின் வெற்றியை விமர்சித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Also Read
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
- 
	    
	      பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
- 
	    
	      SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
- 
	    
	      பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- 
	    
	      ”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!