Viral
உலகின் மிக வயதான மனிதர் 123 வயதில் மரணம் !
உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் நேற்று(15.05.2019) மரணம் அடைந்தார். மரணமடைந்த அப்பாஸ் இலியிவ்க்கு 123 வயதாகும்.ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் 1896-ம் ஆண்டு பிறந்தார்.
1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.
அவருக்கு மது, புகை போன்ற எந்த போதை பழக்கமம் இல்லை என்றும் இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்றும் கூறப்படுகிறது. அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
Also Read
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!