Viral

இந்தியாவின் ஒரு பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பகீர் தகவல் !

இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் தொடங்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தெற்கு சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியது. பின்னர் ஈராக்கிற்கில் இரண்டு முக்கிய நகரங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் உயிரிந்த தீவிரவாதி ஐ.எஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவன் என தகவல் தெரிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பின் செய்தி இணையதளமான அமாக் நியூஸ் ஏஜென்சியில் இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதற்கு 'ஹிந்த் இன் வாலே' என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு தாங்கள் பொறுப்பேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.