Viral
அமெரிக்கா : ஆற்றில் தரையிறங்கிய போயிங் விமானம் !
கியூபாவிலிருந்து,ஜாக்சன்வில் விமான நிலையத்திற்கு 136 பயணிகளை ஏற்றிக்கொண்டு போயிங் 737 விமானம் வந்து கொண்டிருந்தது.ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஆழமற்ற பகுதியில் விமானம் பாய்ந்தது. இதனால், விமானம் நீரில் மூழ்கவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் இயக்கத்தை நிறுத்துவதற்கு பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!