Tamilnadu
“இந்தியாவுக்கே பேரிழப்பு : குரியன் ஜோசப் குழு கலைப்பு” - த.வெ.க.வுக்கு சு.வெங்கடேசன் MP கண்டனம்!
ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளை அளிக்க தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவைக் கலைத்த த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் த.வெ.க அரசு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்துள்ள கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ”பா.ஜ.க.வால் நமது அரசியல் சாசனத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு எதிராக உருவாக்கப்படும் பெரும் கருத்தாயுதம் ஒன்றை நாம் இழக்கிறோம். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, கடந்த 75 ஆண்டுகாள அனுபவத்திலிருந்து இந்திய குடியரசை மேலும் மேன்மையுடையதாகவும், அதிகார சமத்துவமுடையதாகவும் மாற்ற நினைக்கும் இந்தியர்கள் அனைவருக்குமான பேரிழப்பு” என கண்டித்துள்ளார்.
அதேபோல் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ”ஒன்றிய - மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான ‘ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழு’ கலைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தைக் கலைக்கும் முடிவை த.வெ.க அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி எம்.எச்.ஜவாஹிருல்லா, "நீதியரசர் குரியன் ஜோசப் குழுவைக் கலைத்தது மாநில உரிமைகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளுடன் ஒத்துப்போகிறது என்ற காரணத்தைக் கூறி இக்குழுவைக் கலைத்திருப்பது ஏற்க முடியாதது. இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற்று, எஞ்சிய ஆய்வுகளைத் தொடரவும், முதல் அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்தவும் த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்த முதலமைச்சர் விஜய் ; வரலாறு மறக்காது, மன்னிக்காது” : தி.மு.க!
-
“அதிபர் டிரம்பின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தேர்தல்” : முரசொலி தலையங்கம்!
-
கோவை அறிவுலகம் புத்தகம் விவகாரம்.. அரசியலுக்கு பயன்படுத்தும் தவெக.. சட்ட நடவடிக்கை தேவை! : கோவி.செழியன்!
-
தீபாவளிப் பயணம் வேதனைப் பயணம்.. சொந்த ஊருக்கு செல்வோரை திண்டாட வைத்த த.வெ.க அரசு!
-
வெட்டி ஒட்டிய அட்ரெஸ் ; பொய் மேல் பொய் பரப்பி வரும் தரங்கெட்ட தவெக தற்குறிகள் - தி.மு.க ஐடி விங் பதிலடி!