Tamilnadu
ரூ.2 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு... அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை... 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!
கடந்த 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, 2006-ல் இவர் மீது ரூ.2 கோடியே 7 லட்சத்தி 96 ஆயிரம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர் மட்டுமல்லாது இவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்ததன் ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு துாத்துக்குடி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக 108 சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நிறைவடைந்தது.
தொடர்ந்து இந்த வழக்கை இன்று விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா தேவி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் என 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசு தரப்பு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக எந் குற்றச்சாட்டையும் நிரூபிக்காததால் இந்த வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் உறவினர்கள் முறையாக கணக்கு வழக்கு வைத்திருந்த காரணத்தினால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கோவையில் 50 சென்டில், 3 தளங்களை கொண்ட திமுக அலுவலகம்.. - அடிக்கல் நாட்டும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனில்லை!” : மரிய வில்சனுக்கு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பதிலடி!
-
ஓய்வை அறிவித்த Glenn Maxwell.. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் அசைக்க முடியாத தூண்..!
-
நாளை (நவ.4) கோவை வருகைதரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! : பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் விவரம் உள்ளே!
-
அசாமிலிருந்து கொண்டுவரப்பட்ட 5 யானைகள் : வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.க - த.வெ.க-வின் ரகசியக் கூட்டு!