Tamilnadu
தவெக நிர்வாகி வீட்டில் ரெய்டு; 135 KG போதைப்பொருள் பறிமுதல்: சிக்கப்போகும் முக்கியப் புள்ளிகள் யார் யார்?
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ (DRI) திருச்சி மண்டல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில், பூபாலன் மற்றும் அவரது நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் ஆகியோரது வீடுகளில் ஐந்து பேர் கொண்ட டிஆர்ஐ அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனையில், 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட பூபாலன் மற்றும் சுகன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் உதவியின்றி இத்தகைய கடத்தல் எவ்வாறு நடைபெற்றிருக்க முடியும், இதன் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் யார் என்ற கோணங்களில் விசாரணை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் தவெக அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் சூழலில், தவெக முக்கிய நிர்வாகியின் வீட்டில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” : தி.மு.க கடும் விமர்சனம்!
-
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் : தவெக அமைச்சர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? - DMK IT WING!
-
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
“உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது!” : த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எச்சரிக்கை!
-
“தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!