Tamilnadu
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகமான டிஆர்ஐ (DRI) திருச்சி மண்டல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பான புகாரின் அடிப்படையில், பூபாலன் மற்றும் அவரது நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் ஆகியோரது வீடுகளில் ஐந்து பேர் கொண்ட டிஆர்ஐ அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனையில், 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட பூபாலன் மற்றும் சுகன் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளையும் தவெக அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் சூழலில், தவெக முக்கிய நிர்வாகியின் வீட்டில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக அயலக அணிச் செயலாளர் எம். எம்.அப்துல்லா வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "திமுகவில் இருந்த ஜாபர்சாதிக் என்ற ஒருவன் மெத்த பெட்டமைன் போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டான்.
அவன் ஒரு பொது இடத்தில் ( கவனிக்க.. என் வீடோ அல்லது அவன் வீடோ அல்லது என் அலுவலகத்திலோ அல்லது அவன் அலுவலகத்திலோ அல்ல! பொது இடம்) வைத்து எனக்கு சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்து ( கவனிக்க.. ஒரே ஒரு ஃபோட்டோ.. இரண்டாவது ஃபோட்டோவே அவனுக்கும் எனக்கும் இருக்காது, கிடைக்காது.
காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பும் அவனை நான் பார்த்ததில்லை அந்த நிகழ்ச்சிக்கு பின்பும் அவனை நான் பார்த்ததில்லை) பொது இடத்தில் வைத்து சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்துக் கொண்டு அவனோடு சேர்ந்து நானும் போதைப் பொருட்கள் கடத்திவதாகவும் அவனோடு சேர்ந்து கென்யா போன்ற நாடுகளுக்கு நான் சென்றதாகவும் ஒரு அப்பட்டமான பச்சை பொய்யான செய்தியை புரோக்கர் சவுக்கு சங்கர் துவங்கி கிசுகிசு பாணியில் ஜூனியர் விகடன் வரை எழுதினார்கள். பிஜேபி அண்ணாமலையின் வார்ரூம் அடியாட்களும் விஜயின் ரூட்மாஃபியா கோஷ்டியும் இணையம் முழுவதும் அதை பரப்பினர்.. காலம் பதில் சொல்லும் என்று நான் அமைதியாகக் கடந்து விட்டேன்.
இப்போது தவெகவை சேர்ந்த பூபாலன் என்பவன் அதே மெத்த பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்தி உள்ளான். முதல் அமைச்சர் விஜயோடேயே “நெருங்கிய” தொடர்புடையவன் என்பது இந்த ஃபோட்டோ மூலம் தெரிகிறது? அது மட்டுமின்றி விஜயின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே கிரிக்கெட் கிரவுண்டில் “ஏதோ ஒரு” மாத்திரையை நசுக்கும் காணொளியே வந்தது!!
“இதன் மூலம் விஜய் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறாரா? அவர்களோடு இணைந்து அவரும் அந்தத் தொழிலை செய்கிறாரா? அந்தத் தொழிலில் ஈட்டிய பெரும் பணத்தால் தான் அவர் கட்சி துவங்கினாரா? அவர் வெளிநாடு சென்று வந்ததெல்லாம் இந்த தொழில் நிமித்தம்தான?”
என்றெல்லாம் கேட்டு இப்போது புரோக்கர்கள் சவுக்கு சங்கர் , ஃபெலில்ஸ், தமிழா தமிழா பாண்டியன் போன்றோர்கள் விவாதித்து காணொளி வெளியிடுவார்களா? அவர்கள் உருவாக்கும் இந்த செய்தியை ரூட்மாஃபியாகள் இணையவெளி எங்கும் பரப்புவார்களா!!!? வாருங்கள் உண்மைக்காக காத்திருப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தவெக நிர்வாகி வீட்டில் ரெய்டு; 135 KG போதைப்பொருள் பறிமுதல்: சிக்கப்போகும் முக்கியப் புள்ளிகள் யார் யார்?
-
“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” : தி.மு.க கடும் விமர்சனம்!
-
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் : தவெக அமைச்சர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? - DMK IT WING!
-
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
“உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது!” : த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எச்சரிக்கை!