Tamilnadu
10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதிகள், முடிவுகள் வரை! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடைபெறும். அதன்படி, நடப்பு கல்வியாண்டான 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2027 மார்ச் 3 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 2027 பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
முக்கியப் பாடங்களும் தேர்வு தேதிகளும்!
2027 மார்ச் 3 – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.
மார்ச் 8 – ஆங்கிலம்.
மார்ச் 12 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்.
மார்ச் 15 – கணினி அறிவியல், உயிரி வேதியியல்.
மார்ச் 19 – உயிரியல், தாவரவியல், வரலாறு.
மார்ச் 23 – இயற்பியல், பொருளியல்.
மார்ச் 29 – கணிதம், விலங்கியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியாகும் (Tentative) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
2027 மார்ச் 17 – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.
மார்ச் 25 – ஆங்கிலம்.
மார்ச் 31 – கணிதம்.
ஏப்ரல் 5 – அறிவியல்.
ஏப்ரல் 9 – சமூக அறிவியல்
தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதி (Tentative) வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11-ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு
கடந்த கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பழைய பாடத்திட்டத்தின்கீழ் தேர்ச்சி பெறாமல் நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் அரியர் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதன்படி, 11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2027 மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பாடவாரியான தேர்வு தேதிகள்:
மார்ச் 5 – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.
மார்ச் 16 – ஆங்கிலம்.
மார்ச் 18 – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்.
மார்ச் 22 – கணிதம், விலங்கியல், வணிகவியல்.
மார்ச் 24 – இயற்பியல், பொருளியல்.
மார்ச் 30 – கணினி அறிவியல், உயிரி வேதியியல்.
ஏப்ரல் 1 – உயிரியல், தாவரவியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கான் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பொதுத்தேர்வு கால அட்டவணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ணையதளத்தில் பொதுத்தேர்வு அட்டவணை தொடர்பான அறிவிப்பைத் தேர்வு செய்து, தங்களுக்குரிய வகுப்பின் தேர்வு அட்டவணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Also Read
-
“CJP-க்கு தி.மு.க துணை நிற்கும்!” : பா.ஜ.க.வைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
யார் திறந்து வைத்தாலும், மெட்ரோ கனவை நிறைவேற்றியது கலைஞரும், தி.மு.க தலைவரும் தான்! - முரசொலி தலையங்கம்!
-
“ஊழல் Deal முடிக்க பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கும் பஞ்ச் டயலாக் CM” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
பாசிச எதிர்ப்புக்கெல்லாம் கூப்பிடாதீர்கள் ; செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா? - தயாநிதிமாறன் MP!
-
MLA-க்களை Purchase செய்ய பணம் போதாததால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க திட்டமா? : மு.க.ஸ்டாலின் விமர்சனம்!