Tamilnadu
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!
தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க அரசு, அதிகாரிகளைத் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்தி அரசுக்குப் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளது சம்பந்தமாகப் புகார் மனு அளித்தார்.
புகார் மனு அளித்த பிறகு, என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் "திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் சம்பந்தமாகப் புகார் மனு அளித்திருக்கிறோம்.
"இடைத்தேர்தல் தோல்விப் பயத்தால், இந்த அரசு அரசாங்கத்தையும் அரசாங்க ஊழியர்களையும் நிர்வாகத்தையும் துஷ்பிரயோகம் செய்து, இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றுவிடலாம் என்று நினைக்கிறது. இது குறித்தே தற்போது புகாரளித்திருக்கிறோம்.
அரசாங்க ஊழியர்களைத் தன்னுடைய வெற்றிக்காகத் த.வெ.க அரசு பயன்படுத்தியிருக்கிறது என்பதை, நாங்கள் எடுத்த வீடியோ பதிவு மூலம் ஆதாரமாக இணைத்துப் புகார் அளித்திருக்கிறோம்.
நேற்றைய தினம் விஜய் அவர்கள் செல்லும்போது, கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.
"கொடி, பேனர், தடுப்புகள் எனப் பல லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். இந்தச் செலவை மதுராந்தகம் தொகுதி வேட்பாளரின் கணக்கில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு வீட்டிற்கும் டிபன் பாக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இது வெறும் டிபன் பாக்ஸ் மட்டுமல்ல, இதில் ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் வைத்துக் கொடுப்பதாக அங்கு இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள்.எனவே, அங்குச் சோதனையையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.
அதேபோல, த.வெ.க-வின் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்யான, அவதூறான மற்றும் அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் பேசியிருக்கிறார். எனவே, அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறோம்.
அனைவராலும் மிகுந்த கண்ணியமாகப் பேசக்கூடியவர் என்று பாராட்டுப் பெற்றவர்தான் எங்கள் தலைவர் அவர்கள்."
"சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சரை உருவக் கேலி செய்யும்போது இவர்களெல்லாம் எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. எனவே, இவர்களுக்கெல்லாம் பேசுவதற்கே தகுதியே கிடையாது. முதலமைச்சர் விஜய், 'நான் என்ன அதுவா?' என்று கேட்கிறார். அதற்கு யாரும் விளக்கம் கேட்கவில்லையே!"
"நாங்கள் எப்போதும் பணத்தை நம்பித் தேர்தலைச் சந்திப்பதில்லை; மக்களை நம்பித்தான் தேர்தலைச் சந்திக்கின்றோம். தவெக-வினர் தோல்விப் பயத்தாலும், தோல்வி ஜுரத்தாலும் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“புதுச்சேரி - கொலைச்சேரி ; திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா.. பந்தாடப்பட்ட பாகிஸ்தான்!
-
தொடர் அட்ராசிட்டி... கிராம சபைக் கூட்டத்தை நடத்திய தவெக நிர்வாகிகள்.. சேலத்தில் அதிர்ச்சி! | VIDEO
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!