Tamilnadu
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மூலனூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கி.வீரமணி, ”அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் பேசுகிறேன். நியாயமான அரசியல் இருக்க வேண்டும். தாராபுரத்தில் நடைபெறுவது திணிக்கப்பட்ட தேர்தல். மக்கள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தேர்தல் குறித்து மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.
இது மாற்றம் அல்ல; ஏமாற்றம். எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஏதோ ஒன்றை கூறிவிட்டு செல்கின்றனர். முதலமைச்சர் வாக்கு சேகரிக்க வருகிறாரே, இது ஜனநாயகமா? நீதிமன்றமே கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளது. இதற்கு தோல்வியை கொடுப்பதுதான் சரியான தண்டனை” என்றார்.
மேலும், “ரூ.2,500 வழங்கப்படும் என்று கூறினார்களே, உங்களுக்கு கிடைத்ததா? சட்டமன்றம் காட்சி மன்றமாக இருக்கிறது; ஆட்சி மன்றமாக இல்லை. எதிர்க்கட்சிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு ஆளுங்கட்சி பதில் அளிக்க வேண்டும்.
ஸ்டாலின் ஒப்பற்ற ஆட்சியை செய்தார். அவருடைய சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும். முதலமைச்சர் புதிய சட்டமன்றம் கட்ட கடன் வாங்குகிறார். ஜோசியர் சொன்னார் என்பதற்காக கடற்கரையில் கட்டிடம் கட்டுகிறார். எப்போது எந்த சட்டை அணிய வேண்டும் என்பதுகூட ஜோசியர் முடிவு செய்கிறார்” என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கைகள் உள்ளன. தற்போது யார் அரசை நடத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை. பாசிசத்தை பாயாசத்தில் ஊற்றிக் கொடுக்கக்கூடிய ஆட்சி தற்போது உள்ளது.
ஏன் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கக்கூடிய தேர்தல். மக்கள் வரிப்பணம் வீணாகக் கூடாது.
சினிமாவில் டூப் போடுவார்கள்; ஆட்சியில் டூப் என்பது இதுதான் முதல்முறை. வாக்காளர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஆட்சியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களே மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!
-
“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!