Tamilnadu
சென்னையில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க இளைஞரணி நிர்வாகி கைது!
பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இக்குற்றங்களைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட 'சிங்கப்பெண்' காவல் படைத் திட்டம் இப்போது எங்கே இருக்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பும் அளவிற்குப் பாலியல் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, த.வெ.க-வை சேர்ந்தவர்களே இதுபோன்ற அவதூறான செயல்களில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 65 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க நிர்வாகியைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை அசோக் நகர் பகுதியில் சாலையோரத்தில் தங்கி, செருப்பு தைக்கும் வேலையில் 65 வயது மூதாட்டி ஒருவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், மதுபோதையில் அந்த மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மூதாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் த.வெ.க கட்சியின் இளைஞரணி வட்டச் செயலாளர் ஆனந்த் என்பது தெரியவந்தது.
இதையடுத்துக் காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மின்வெட்டே கிடையாதென தமிழ்நாட்டு மக்கள் காதில் பூ சுற்றும் தவெகவின் மெகாவாட் பொய்கள் : முரசொலி தலையங்கம்!
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!