Tamilnadu
பச்சிளம் குழந்தைகளின் மருந்துக்கு தட்டுப்பாடு; என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? : கனிமொழி MP!
திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் தலைசிறந்து விளங்கின. ஒன்றிய பா.ஜ.க அரசே இதனைப் பாராட்டிப் பல விருதுகளை வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்வதைப் போல, "கல்வியும், மருத்துவமும் எனது இரு கண்கள்" என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல், நிஜமாகவே மெய்ப்பித்து வந்தார்.
ஆனால் இன்றோ, த.வெ.க ஆட்சியில் பச்சிளம் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே காரணமாகும்.
இது குறித்து எதிர்க்கட்சிகளும் கடந்த இரண்டு நாட்களாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றன. ஆனால், முதலமைச்சரும், அமைச்சர்களும் மௌனம் காத்து வருகிறார்கள்.
இந்நிலையில், "இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா?" என த.வெ.க அரசுக்கு தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் "சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை?இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா?
குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
ரேஷன் அரிசிக்கு பாலிஷ் போட்டு கொள்ளை அடிக்கும் தவெக அரசு.. இதுவா Dummy CM சொன்ன மாற்றம்?: உதயநிதி கேள்வி!
-
புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்க.. - ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் MP அவசர கடிதம்!
-
இவருக்கு பதில் இவர்... மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் விஜய்... தீபக் நாதன் கடும் கண்டனம்!
-
த.வெ.க வழங்குவது ஆட்சியா.. க்ரைம் த்ரில்லர் படமா? : கீதா ஜீவன் கடும் சாடல்!
-
“நிதி இல்லை என்று கைவிரிப்பது நிர்வாகத்தின் பதிலாகிவிடாது” ; அமைச்சர் ரமேஷ்-க்கு சேகர்பாபு பதிலடி!