Tamilnadu

மதுராந்தகத்தில் ஒப்பாரி வைத்த ஆதவ் அர்ஜுனா: தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் அதிரடி!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய பரந்தாமன்,”4 நிமிடம்கூடத் தங்களது ஆட்சியின் சாதனைகளைக் கூறி வாக்குக் கேட்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு வக்கில்லை. பேசிய 45 நிமிடமும் ஒப்பாரி வைத்துள்ளார். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்"

"ஆதவ் அர்ஜுனா என்ன த.வெ.க.வில் ஆதிகாலத்தில் இருந்தா இருக்கிறாரா? விஜய் படங்களுக்காக அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டினார்கள். அப்படி இவர் போஸ்டர் ஒட்டினாரா? பல கட்சிகளுக்குத் தாவியவர்தான் ஆதவ் அர்ஜுனா. இவருக்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை"

"‘ஊரான் வீட்டு நெய்யே ’ என்று தேர்தல் பிரசாரத்தில் விஜய் பேசினார். இந்த இடைத்தேர்தலில் த.வெ.க.வின் வேட்பாளர் யார்? அதுதான் ஊரான் வீட்டு நெய். த.வெ.க.வில் யாருமே இல்லையோ? பெட்டியைக் கொடுத்து அ.தி.மு.க.விலிருந்து தூக்கிக்கொண்டு வந்து இன்று வேட்பாளராக அறிவித்திருக்கிறார் விஜய்” என தெரிவித்துள்ளார்.

Also Read: த.வெ.கவுக்கு அடிப்படைப் புரிதல் கூட இல்லை : நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் - ஆர்.எஸ்.பாரதி புகார் மனு!