Tamilnadu
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPI-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், முடிவு செய்து வேட்டபாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (மார்ச் 28) திமுக வேட்பாளர்களை அறிவித்தார் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது.
அந்த வகையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு :-
1. திருத்துறைப்பூண்டி (தனி) - மாரிமுத்து
2. தளி - டி.ராமச்சந்திரன்
3. திருப்பூர் வடக்கு - எம். ரவி
4. பவானிசாகர் (தனி) - பி.எல்.சுந்தரம்
5. திருவில்லிபுத்தூர் (தனி) - பி.மகாலிங்கம்
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!