Tamilnadu

'ஸ்டாலின் தொடரட்டும் ; தமிழ்நாடு வெல்லட்டும்' - திருச்சியில் தொடங்கியது தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும், இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

கடந்த தேர்தலின் போது இதே இடத்தில் மகளிர் உரிமைத்தொகை போன்ற 7 வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் அறிவித்தார். அந்த மாநாடு தி.மு.க.விற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதே போன்று இந்த மாநாட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை திருச்சியில் நடந்தேறிய மாநாடுகள் தி.மு.க-விற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதாகவும், தி.மு.க வரலாற்றின் ஒரு பெரும் நிகழ்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இன்று நடைபெறும் மாநாடும் திராவிட மாடல் அரசின் 2.0 ஆட்சிக்கு கட்டியம் கூறுவதாக அமையும் என்றே அரசியல் நோக்கர்கள் அடித்து கூறுகின்றனர்.

தி.மு.க இதுவரை நடத்தியுள்ள 11 மாநாடுகளில் 6 மாநாடுகள் திருச்சியில் தான் நடந்துள்ளன. இப்போது 12வது மாநில மாநாடும் திருச்சியில் நடக்கிறது.

திருச்சியை “தீரர்கள் கோட்டம்” என்று அண்ணா அழைத்தார். தலைவர் கலைஞர் அவர்கள் கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து போராட்டம் நடத்தினார்.

தி.மு.க.வின் பல போராட்டங்களுக்கு திருச்சிதான் அடித்தளமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும். அதனால் தான் இம்மாநாடு மிகுந்த எதிர்ப்பார்பை தமிழ்நாடு முழுவதும் ஏன இந்தியா முழுவதுமே ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரூ.21.72 கோடியில் முதல்வர் படைப்பகங்கள், பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!