Tamilnadu

பிப்ரவரி மாதத்தில் 96.40 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் : ஒரேநாளில் மட்டும் இவ்வளவு பேர் பயணமா?

சென்னை மெட்ரோ ரயில்களில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 96,40,993 பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 49,11,328 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,121 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,91,544 பயணிகள் (Single journey Paper QR /Token 19,10,265; Online QR – 1,26,618; Static QR 2,11,188; Whatsapp - 4,51,491; Paytm 3,27,534; ONDC – 11,47,636; PhonePe – 2,70,088; CMRL Mobile App 64,649; Chennai One App – 1,59,134; Event QR - 22,941) பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 20.02.2026 அன்று 3,99,503 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 2 அடித்தளங்கள், 11 தளங்கள்.. ரூ.249 கோடியில் திறக்கப்பட்ட Fintech Tower.. அசத்திய திராவிட மாடல்!