Tamilnadu
இவ்வளவு வசதிகளா...நவீன நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: - முழு விவரம்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (25.2.2026) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கண்ணகி நகரில் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப் பகுதிகளில் 23,704 குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பகுதியில் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11,162 சதுர அடி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களுடன் 11,572 சதுர அடி பரப்பளவில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நவீன நூலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் வரவேற்கும் இடம், புத்தகங்கள் வைத்திருக்கும் இடம், குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் விளையாடும் இடம், பயிற்சி அறை, திறந்த நிலை பயிலும் இடம், 10,000 லிட்டர் நீர்த்தேக்கத் தொட்டி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று இந்த நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நூலகத்தில் தினசரி நாளிதழ்கள் பிரிவில் வாசகர்கள் நடப்பு செய்திகளை குறிப்பு எடுப்பதை பார்வையிட்டு அவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் குழந்தைகள் பிரிவில் அவர்களுடன் உரையாடி குழந்தைகளுக்கு பிடித்த புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி