Tamilnadu
44 காவல்துறையினருக்கு குடியரசு தின பதக்கங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாட்டளவில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல்துறை அதிகாரிகள்/பணியாளர்களுக்கு;
முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பணிப் பதக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் பணியாற்றிய 43 காவல்துறை அதிகாரிகள்/பணியாளர்கள் மற்றும் 1 தனிப் பிரிவு உதவியாளர், நுண்ணறிவுப் பிரிவு ஆகியோருக்கு “முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்” வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா பத்து கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.
Also Read
-
“வீட்டுக்கொரு சோலார்“ திட்ட பரப்புரை! : அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!
-
“அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
இந்திய கிரிக்கெட் அணி படைத்த இமாலய சாதனை... மிரட்டிய இஷான் கிஷனின் ஆட்டம்! நாலாபுறமும் சிதறிய பந்துகள்!
-
துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் - பெரும் அநீதி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
-
நீக்கப்படும் 16,000 பணியாளர்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் அமேசான்... திணறும் ஊழியர்கள்!