Tamilnadu

விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (05.01.2026) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் மற்றும் கயாகிங், சைக்கிளிங், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், வளைகோல்பந்து;

ஜுடோ, கபடி, நீச்சல், நீச்சல் டைவிங், மேசைப்பந்து, டேக்வாண்டோ, டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்றுநர் பணியிடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இப்பயிற்றுநர் பணிகளுக்கான கல்வி தகுதி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஏனைய விவரங்கள்  https://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது.  உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பயிற்றுநர்கள் அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை அறிந்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்தது முதல், தமிழ்நாட்டில் இருந்து திறமையான வீரர்களை உருவாக்கிடத் தேவையான Sports Coaches-ஐ SDAT மூலமாக மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்து பணியில் அமர்த்தி வருகிறோம்.

அந்த வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டுகளுக்கான Coaches பணியிடங்கள் மற்றும் Para-Sports Coaches பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன.

SDAT-ன் Coaches-ஆக பணியாற்ற விரும்புவோர், தங்கள் தகுதி மற்றும் திறமை உள்ளிட்ட விவரங்களுடன் https://sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்காக விண்ணப்பிக்கும் அத்தனைப் பேருக்கும் என் அன்பும், வாழ்த்தும்!”

Also Read: ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?