Tamilnadu

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் : முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் நன்றி!

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.1.2026) ஆணையிட்டார். 

ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையினை நிறைவேற்றியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், ஜாக்டோ-ஜியோ, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் (தியோடர்), தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, நர்சுகள் பொதுநல சங்கம், தமிழ்நாடு அளவிலான பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்.சி./எஸ்.டி ஆசிரியர் சங்கம், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் (தீபம்), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கல்வித்துறை தட்டச்சர்கள் சங்கம், தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் பள்ளி   ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அளவிலான பள்ளி ஆய்வக உதவியாளர் சங்கம்  உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.  

Also Read: 750 SI & தீயணைப்புத் துறை அலுவலர்கள் பணி நியமனம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!