Tamilnadu

கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் சாடியவல் யானைகள் முகாம் : திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், கோவையில் வனத்துறை சார்பில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், ரூ 2.50 கோடி மதிப்பிலான அதிநவீன துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை வனப்படையினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், ரூ.19.50 கோடி மதிப்பிலான வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தினை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தோம். அதோடு, கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சாடியவல் யானைகள் முகாமையும் துணை முதலமைச்சர் திறந்து வைத்தோம்.

மேலும், ரூ 2.60 கோடி மதிப்பிலான வனத்துறை மின்னணு ஆவணக் காப்பகம் - இணையதளத்தின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார். முன்னதாக வனத்துறையில் பணியாற்றி உயிர்நீத்த வனப்படை தியாகிகளின் நினைவுத் தூணுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ”வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாப்போம் - இயற்கையை என்றும் நேசிப்போம்” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர் : வீரபாண்டியன் கடும் கண்டனம்!