Tamilnadu

திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, நன்னிமங்கலம் மெயின்ரோட்டில் தாய், தந்தையை இழந்து சித்தி, சித்தப்பா பாதுகாப்பில் இருந்துவரும் வசித்துவரும் குழந்தைகள் சுவாதி, ஸ்வேதா, சிவேஷ்வர் ஆகியோரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் வீடியோ கால் வாயிலாக ஆறுதல் கூறினார்.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அலைபேசியில் வீடியோ கால் வாயிலாக குழந்தைகளிடம் தைரியமாக இருக்க வேண்டுமெனவும், கல்வியில் சிறந்து விளக்கவேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்கள்.

பின்னர், தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட, இலவச வீட்டுமனை பட்டாவினை குழந்தைகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் வழங்கினார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் இக்குழந்தைகளுக்கு ரூ.2000 கிடைக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர் பாத்திமா பஷிரா தாஜ், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சிவரஞ்சனி, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் வசுமதி, மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: “நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!