Tamilnadu

இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?

மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட புதூர் சேது பாஸ்கரா மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், ENT மருத்துவம், கண் மருத்துவம், நுரையீரல், இதய நோய் மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட உடல் சார்ந்த முழு பரிசோதனை உள்ளிட்ட மருத்துவம் முகாமில் நடைபெறுகிறது.

கடந்த ஆகஸ்டில் தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சராக தொடங்கப்பட்டது. 1,256 முகாம்கள் அறிவித்த நிலையில் தற்பொழுது வரை 683 முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று 32 மாவட்டங்களில் 45 இடங்களில் மூகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுவரை 10 லட்சத்துக்கு 58ஆயிரத்து 256 பேர் மருத்துவ பயன் பெற்றுள்ளனர். முகாமில் கூடுதலாக அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டையும், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதுவரை 32,516 பேருக்கு காப்பீடு திட்டம் அட்டைகளும், 41,324 மாற்றுதிறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்...

"9 முதல் 14 வயதுடைய இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணி முடிந்து தடுப்பூசி செலுத்தும் பயிற்சி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான விலையில்லா தடுப்பூசி பணி தொடங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 3 லட்சத்து 38 ஆயிரம் மாணவிகள் பயன் பெறவுள்ளனர்.

இதன் தொடக்கமாக தமிழ்நாட்டில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிக அளவு கண்டறியப்பட்டுள்ள அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி முதலில் செலுத்தப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு 5000 ரூபாய் வரை செலவாகும் ஆனால் திட்டமூலமாக தமிழ்நாடு அரசு விலையில்லாமல் தடுப்பூசியை செலுத்துகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. உலக அளவில் தமிழ்நாட்டை உற்று நோக்கும் திட்டமாக இத்திட்டம் அமைய உள்ளது." என கூறினார்.

Also Read: “அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!