Tamilnadu
”2026 தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறும்” : சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!
மக்களுடன் யார் இருக்கிறார்கள், கஷ்டம் வரும்போது யார் துணை நிற்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும். மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சாரக அரியணையில் அமர்வார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு ”கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது, அங்கிருந்து வெளியேறிய த.வெ.க கட்சியை என்ன செய்வது என்று மக்கள் முடிவு செய்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நேரில் சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
மக்களுடன் யார் இருக்கிறார்கள்? கஷ்டம் வரும்போது யார் துணை நிற்கிறார்கள்? என்பதை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டிதான் இருக்கிறோர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறும். மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அரியணையில் அமருவார்.
அ.தி.மு.கவினர் எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்வது என்பது அவர்களின் சொந்த விருப்பம் ஆகும். டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷாவை இரண்டு முறை சந்தித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேரில் சென்று பார்த்தார். அமித்ஷா சொல்லித்தான் செங்கோட்டையன் செயல்படுவதாக செய்திகள் வந்தது. அவர் கண்ணியத்துக்குரிய சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
அவர் பா.ஜ.வின் ஸ்லீப்பர்செல் என்று கூறுகிறார்கள். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் சதி செய்வதில் வல்லவர்கள். எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
த.வெ.க அகராதியிலேயே.. : 'மின்வெட்டே இல்லை' என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!