Tamilnadu

”S.I.R-ஐ துணிச்சலுடன் எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.கதான்” : கரு.பழனியப்பன் பேச்சு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக இளைஞரணி முன்னெடுப்பில் அறிவுத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ’வரலாற்றைப் படிப்போம், வரலாற்றைப் படைப்போம்’எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உரையாற்றினார்.

அப்போது பேசிய கரு.பழனியப்பன், ’கருப்பு சிவப்பு’ புத்தகத்தை யாராவது இரண்டு வாங்கி இருந்தால் அதில் ஒன்றை விஜய்-க்கு கொடுங்கள். அவரது கட்சியின் முதல் மாநாட்டில், அவருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே 8 அடி இடைவெளி இருக்கும்.மனித வாடையே விஜய்-க்கு ஆகாது. ஆனால் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற அவர்களது கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளோடு நெறுங்கி அமர்ந்து இருந்தார்.

புதிதாக கட்சிகள் வரும்போதுதான், தி.மு.க என்ற இயக்கம் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் எவ்வளவு உழைக்கின்றது என்று நமக்கு தெரிகிறது. இந்தியாவிலேயே S.I.R-ஐ துணிச்சலுடன் எதிர்த்து நீதிமன்றம் சென்று சட்டப்போராட்டம் நடத்தி வரும் ஒரே கட்சி தி.மு.கதான். மற்ற கட்சிகளுக்கு S.I.R-ன் ஆபத்து குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை. தி.மு.க மட்டும்தான் அதன் ஆபத்தை நன்கு உணர்ந்துள்ளது.

தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக இயங்கிக் கொண்டே இருக்கும். ஆனால் அ.தி.மு.க அப்படி கிடையாது. கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கு இருந்தார் என்று யாருக்குமே தெரியாது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு மட்டுமே அ.தி.மு.க செயல்படும். எதிர்க்கட்சியாக இருந்தால் அ.தி.மு.க உறங்கிவிடும்.

ஆண்டுதோறும் அறிவுத்திருவிழாவை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். நானும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். அது என்ன வென்றால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் அன்று அறிவுத்திருவிழா தொடங்கி, டிசம்பர் 6 தேதி அம்பேத்கர் நினைவு நாளில் நிறைவு விழா நடைபெற வேண்டும் "என தெரிவித்துள்ளார்.

Also Read: UPSC மாணவர்களுக்கு ரூ.50000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!