Tamilnadu
”சங்கிகளின் கொள்கையை தாங்கி பிடிக்கும் பழனிசாமி” : அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்!
மதுரை கோரிப்பாளையம் மற்றும் மேலமடை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு,”10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தென் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது. பின்னர் தி.மு.க ஆட்சிக்கு அமைந்தவுடன் தென் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாகத்தான் ரூ.150 கோடி மதிப்பிட்டு மதுரை மேலமடையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடி மதிப்பீட்டில் நீர்மட்டம் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பாலப் பணிகள் ஜனவரியில் முடிக்கப்படும். மதுரை தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆய்வு முடிவுகளின் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.
இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் SIR ஐ எதிர்க்கிறது. கொளத்தூரில் கள்ள ஓட்டுக்கள் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினாரா?, அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது ஒன்றை பேசி வருகிறார்.
நாங்கள் எதை சொன்னாலும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர் கருத்துதான் கூறுவார், இந்தியாவில் உள்ள அனைவரும் SIR ஐ எதிர்த்து கருத்து சொல்லும் போது எடப்பாடி பழனிச்சாமி மட்டும் SIR ஐ ஆதரித்து கருத்து சொல்வது ஏதற்காக?, பா.ஜ.கவோடு அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளதால் பா.ஜ.கவின் செயல்பாடுகளுக்கு அ.தி.மு.க ஒத்து ஊதுகிறது. எடப்பாடி பழனிச்சாமி சங்கிக் கொள்கையை தாங்கி பிடிக்கிறார்.
அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த திராவிட கொள்கையை கலைஞர் நிறைவேற்றினார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார், திராவிட கொள்கையை தி.மு.க மட்டும் தான் கடைப்பிடித்து வருவதால் அ.தி.மு.க உள்ளிட்ட பிறகட்சகளை தேர்ந்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் அவரை பலரும் தி.மு.கவில் இணைகிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் என அனைவருக்கும் முதலமைச்சர் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தினை வகைகளை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் : 3 நாட்கள் பயிற்சி - எங்கே? எப்போது?
-
"பெண்களை பாதுகாக்கும் அரசு திராவிட மாடல் அரசு" : அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
-
UPSC முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு : தொடர்ந்து சாதிக்கும் ’நான் முதல்வன்’ திட்ட மாணவர்கள்!
-
”தங்கத்தை பதுக்கும் பா.ஜ.க. தலைவர்கள்” : முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் குற்றச்சாட்டு!
-
செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் எழுப்பும் கேள்வி : பதறும் ‘கொடநாடு’ பழனிசாமி - முரசொலி!