Tamilnadu
மீனம்பாக்கம் TO தேனாம்பேட்டை.. மெட்ரோவில் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்... துரிதமாக உதவிய சென்னை மெட்ரோ!
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தான உறுப்பு குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ இரயிலில் கொண்டு செல்லப்பட்டதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இன்று (08.11.2025) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏ.ஜி.-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை உயிர் காக்கும் நுரையீரல் தான உறுப்பை கொண்டு செல்வதற்கு , துரித போக்குவரத்து உதவியை வழங்கி முக்கிய பங்காற்றியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ இரயில்வே (Carriage And Ticket) திருத்த விதிகள், 2023-ன் கீழ் இந்த சேவை வழங்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உறுப்புகளைக் கொண்டு வந்த மருத்துவ குழுவினர், விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 02:07 மணிக்கு மீனாம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். சென்னை மெட்ரோ இரயில் அலுவலர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக் குழுவினர் மெட்ரோ இரயிலில் ஏறி, ஏழு நிலையங்களைக் கடந்து, 02:28 மணிக்கு ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை பத்திரமாக வந்தடைந்தனர். அங்கிருந்து, மருத்துவக் குழு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தது. அங்குதான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது.
சென்னை மெட்ரோ இரயில், திறம்பட்ட நகரப் போக்குவரத்தை மட்டுமின்றி அவசர மருத்துவ சேவைகள் மற்றும் உயிர் காக்கும் முயற்சிகளில் பங்களித்து பொதுச்சேவைக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
Also Read
-
ரூ.50 ஆயிரம் மாமுதல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!