Tamilnadu

”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (7.11.2025) புதுடெல்லியில் ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக, ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில், இந்திய ஹாக்கி அணி பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தருணங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களை பார்வையிட்டு, ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.தமிழ்நாடு ஹாக்கியில் ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பைகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர், நாட்டின் சில சிறந்த வெற்றிகளுக்கு பங்களித்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் சாம்பியன்ஸ் டிராபியையும், 2005 ஆம் ஆண்டு மீண்டும் 2007 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையையும், 1999 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் தொடரையும், 2008 ஆம் ஆண்டு இந்தியா-பெல்ஜியம் தொடரையும் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

தற்போது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை இந்த ஆண்டு தமிழ்நாடு நடத்துகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.70 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். எங்களது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக நாங்கள் மாற்றி வருகிறோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!